50 ஆண்டுகால கலைப் பயணத்தை நினைவுகூர்கிறார் பண்பட்ட நடிகர் பன்னீர்செல்வம்

சிங்கப்பூரின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான திரு பன்னீர்செல்வம் அவர்கள், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மேடை, வானொலி மற்றும் தொலைக்காட்சியில் முத்திரை பதித்து வந்துள்ளார்.

தாம் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமாகவே மாறிவிடும் திரு பன்னீர்செல்வம் அவர்கள், மீடியாகார்ப் வசந்தம் தொலைக்காட்சியின் பிரதான விழா 2012ல் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிரதான விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை இவர் முதன்முறையாக வென்றார்.

வசந்தம் நட்சத்திரங்களைப் பேட்டி காணும் எங்கள் ஸ்பாட்லைட் தொடரில் இது இரண்டாவது நேர்காணல். கண்டு மகிழுங்கள்.